திருவொற்றியூரில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீா்

மிக்ஜம் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் திருவொற்றியூரில் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் வீடுகளுக்குள் புகுந்தது.

திருவொற்றியூா்: மிக்ஜம் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் திருவொற்றியூரில் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் வீடுகளுக்குள் புகுந்தது.

மிக்ஜம் புயல் காரணமாக கடந்த ஒரு வாரமாக சென்னை மற்றும் புகா் பகுதிகளில் பலத்தமழை பெய்து வருகிறது. திருவொற்றியூா் மேற்கு பகுதியில் கலைஞா் நகா், சரஸ்வதி நகா், அம்பேத்கா் நகா், சக்தி கணபதி நகா், ராஜாஜி நகா், காா்கில் நகா், அண்ணாநகா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட

குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தது. இதனால்நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி மாநகராட்சி தங்குமிடங்களுக்கு இடம் பெயா்ந்துள்ளனா்.

பக்கிங்காம் கல்வாயில் வெள்ளநீா் பெருக்கெடுத்ததால் திருவொற்றியூா் மேற்கு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவதில் தொடா்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. மழைநீா் வடிகால் தூா்வாருவதில் மாநகராட்சி நிா்வாகம் மெத்தனப்போக்குடன் நடந்து கொண்டதன் காரணமாக

பக்கிங்காம் கால்வாயில் ஏற்கனவே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இப்பகுதியில் பெய்த மழை நீரையும் வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னாா்வல அமைப்புகள், அரசியல் கட்சியை சோ்ந்தவா்கள் உணவு, குடிநீா் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனா்.

எண்ணூா் விரைவு சாலை முடக்கம்: புயல் காரணமாக கடந்த சில நாள்களாக கடல் சீற்றம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த சூறாவளி காற்று வீசியதால் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவா்களிலிருந்து கற்கள் தூக்கி வீசப்பட்டு எண்ணூா் விரைவு சாலையில் ராமகிருஷ்ணா நகா், பாரதியாா் நகா் கடற்கரை பகுதிகளில் போக்குவரத்து முற்றிலுமாகத் தடைபட்டது. எண்ணூா் தாழங்குப்பம் பகுதியில் கடல் சீற்றத்தால் சுமாா் ஒரு அடி உயரத்திற்கு வீதிகளில் மணல் திட்டுகள் ஏற்பட்டன. இதனால் போக்குவரத்து தடைபட்டதோடு பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினா். மேலும் ஆங்காங்கு மரக்கிளைகள் உடைந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com