சு.வெங்கடேசனின் "வேள்பாரி' எனும் நாவலைப் படித்துள்ளேன். அவரது எழுத்து நடை மிகவும் பிடிக்கும். ஆகவே அவரது "காவல் கோட்டம்' நாவலை தற்போது வாங்கியுள்ளேன். தற்போது ஆனந்த் நீலகண்டனின் "அசுரன்', சுந்தர ராமசாமியின் "ஒரு புளியமரத்தின் கதை' ஆகிய புத்தகங்களை வாங்கியுள்ளேன்.
காயத்ரி
பல்மருத்துவர்,
வண்டலூர்.
ஆன்மிக புத்தகங்கள் அனைத்தையும் விரும்பிப் படிப்பேன். விஷ்ணு, சிவபுராண புத்தகங்களைப் படித்துள்ளேன். புத்தகக் காட்சியில் கீழ்க்கோவளவேடு கிருஷ்ணமாச்சாரியார் எழுதிய "பதினெண் புராணங்கள்' எனும் புத்தகத்தை வாங்கிச்செல்கிறேன்.
எஸ்.ரேவதி
குடும்பத்தலைவி,
மறைமலைநகர்.
எனக்கு ஆன்மிகம் சார்ந்த புத்தகங்களைப் படிக்கப் பிடிக்கும். ராமகிருஷ்ணர், விவேகானந்தரின் புத்தகங்களை விரும்பிப் படிப்பேன். பரமஹம்ச யோகானந்தர் எழுதிய "ஆன்ம அனுபூதிக்கான பயணம்' புத்தகத்தை வாங்கியுள்ளேன்.
டி.எஸ்.அபிராம கிருஷ்ணன்
திரைப்படத் துறை,
பழைய வண்ணார்பேட்டை.
சாண்டில்யனின் "யவனராணி' நாவலைத் தொடர்ந்து "கடல் புறா'வை சமீபத்தில்தான் படித்தேன்.
வர்ணனைக்காகவே அவற்றைப் படித்துப் பார்த்தேன். பாரதிதாசனின் "பாண்டியன் பரிசு' உள்ளிட்ட புத்தகங்களை வாங்கிச் செல்கிறேன்.
கே.சீனிவாசன்
ஓய்வுபெற்ற காவல் அதிகாரி, சேலையூர்.
ஏற்கெனவே படித்திருந்தாலும், சமீபத்தில் கல்கியின் "பொன்னியின் செல்வன்' சரித்திர நாவலை மீண்டும் படித்தேன். மகனுக்காக அரசு போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களையும், எனக்காக புதுமைப்பித்தனின் சிறுகதைத் தொகுப்புகளையும் இப்போது வாங்கிச்செல்கிறேன்.
மணிமேகலை
குடும்பத் தலைவி,
காஞ்சிபுரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.