சென்னை பார்த்தசாரதி மேம்பாலம் இடித்துக் கட்டப்படுமா?

ராயபுரம் பகுதியில் அமைந்திருக்கும் பார்த்தசாரதி மேம்பாலத்தில் புனரமைப்புப் பணிகள் நடந்தபோது,  சில வடிவமைப்புக் குறைபாடுகள் இருந்தது கண்டுறியப்பட்டு, புனரமைப்புப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.
சென்னை பார்த்தசாரதி மேம்பாலம் இடித்துக் கட்டப்படுமா?
சென்னை பார்த்தசாரதி மேம்பாலம் இடித்துக் கட்டப்படுமா?

சென்னை ராயபுரம் பகுதியில் அமைந்திருக்கும் பார்த்தசாரதி மேம்பாலத்தில் புனரமைப்புப் பணிகள் நடந்தபோதுதான், அதில் சில வடிவமைப்புக் குறைபாடுகள் இருந்தது கண்டுறியப்பட்டு, புனரமைப்புப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

மேம்பாலத்தை வடிவமைப்பதில் இருக்கும் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, பார்த்தசாரதி மேம்பாலத்தை இடித்துவிட்டு மீண்டும் கண்டுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து தெற்கு ரயில்வேயும், சென்னை மாநகராட்சியும் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, இந்த மேம்பாலத்துடன், ராயபுரத்தில் உள்ள மன்னார்சாமி கோயில் சாலை மேம்பாலம் மற்றும் பெரம்பூர்  லோகோ வொர்க்ஸ் மேம்பாலம் ஆகியவற்றில் விரிசல்கள் ஏற்பட்டதால், அவற்றுக்கு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளுமாறு தெற்கு ரயில்வேயிடமிருந்து, சென்னை மாநகராட்சிக்கு எழுத்துப்பூர்வமாக கடிதம் வரப்பெற்றது. ஆனால் தற்போதைய பரிந்துரையின்படி, அந்த மேம்பாலத்தை இடித்துவிட்டுக் கட்டுவதற்கான செலவில் சென்னை மாநகராட்சி 50 சதவிகித செலவை ஏற்றுக்கொள்ளும் என்று தெரிகிறது.

இந்த பார்த்தசாரதி மேம்பாலத்தில் வடிவமைப்புக் குறைபாடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அதனை இடித்துவிட்டு, கூடுதல் பாதைகளுடன் மேம்பாலத்தைக் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதுபோல, பழைய வண்ணாரப்பேட்டையில் விஜயராகவலு சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தை புனரமைக்கும் பணி 2021ஆம் ஆண்டுடிசம்டபரில் தொடங்கியது. ஏழு மாதங்கள் பணி நடந்து கொண்டிருந்த நிலையில், அந்த பாலத்தை இடித்துவிட்டு மீண்டும் கட்ட வேண்டும் என்று ரயில்வே பரிந்துரை செய்திருந்தது. இதையடுத்து, பாலத்தை புனரமைக்கக் கொண்டு வந்த கட்டுமானப் பொருள்கள் அனைத்தும் பாலத்துக்கு அருகே சாலையில் கொட்டப்பட்டு, அப்படியே கைவிடப்பட்டிருந்தது. அதுவும் தொடர்ச்சியாக வந்த புகாரினைத் தொடர்ந்து அண்மையில்தான் அகற்றப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலம் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட பகுதி. எழும்பூர் முதல் திருவொற்றியூர் வரை செல்லும் மாநகராட்சிப் பேருந்துகளும் இதன் வழியாகத்தான் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே, இந்த  மேம்பாலத்தை இடித்துவிட்டு புதிதாகக் கட்ட வேண்டும் என்றால் அப்பணிகளை விரைவாக செய்து முடிக்க வேண்டும். இல்லையென்றால் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்க நேரிடும் என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com