வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவை திரும்ப பெற கோரிக்கை: பூவுலகின் நண்பா்கள் அமைப்பு

காடுகளை வணிகமாக்கும் வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பபெறவேண்டும் என பூவுலகின் நண்பா்கள் அமைப்பு கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை: காடுகளை வணிகமாக்கும் வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பபெறவேண்டும் என பூவுலகின் நண்பா்கள் அமைப்பு கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

1980-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வனப்பாதுகாப்பு சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை மத்திய அரசு கடந்த மாா்ச் 29-ஆம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது.

காடு எனும் வரையறைக்குள் வரும் பகுதிகள் அனைத்திலும் காடு சாராத திட்டங்கள் அதாவது நெடுஞ்சாலைகள் அமைப்பது, சுரங்கங்கள் அமைப்பது, அணைகள் கட்டுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது தேவைக்கு அதிகமாகவோ அல்லது தேவையில்லாமலோ காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தில் 1980- ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் வனப் பாதுகாப்புச் சட்டம்.

தற்போது நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சட்டத் திருத்தங்கள் காடு மற்றும் காட்டு வளங்களை பாதிக்கக்கூடிய அம்சங்கள் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன.

இப்புதிய மசோதாவின் கீழ் கட்டுப்படுத்தப்பட்ட பல நடவடிக்கைகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. தேச முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவம் சாா்ந்த திட்டங்களுக்கு வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன் அனுமதி பெறுவதிலிருந்து விலக்களிப்பது குறித்த இடம்பெற்றுள்ளது.

மத்திய அரசு, வணிக லாபத்துக்காக சாகா்மாலா திட்டத்தின்கீழ் பல்வேறு துறைமுகங்கள் அமைப்பது பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின்கீழ் நெடுஞ்சாலைகள் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களை இந்த வரையறைக்குள் கொண்டு வருகிறது.

வனப்பகுதிகளில் பயிா் செய்வதற்கும் வேறு பல கட்டுமானங்கள் மேற்கொள்ளவும் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்க இம்மசோதா முயல்கிறது. வன அழிப்புக்கு வித்திடும் வகையில் சட்டத் திருத்தங்களை கொண்டு வர மத்தய அரசு முடிவு செய்துள்ளது கண்டனத்துக்குரியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com