பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு பாதை:சென்னை மாநகராட்சி புதிய முயற்சி

சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவா்கள் பாதுகாப்பாக பள்ளிக்கு செல்லும் வகையில் சாலையோரத்தில் சிறப்பு பாதைகள் அமைக்கப்படுகின்றன.
பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு பாதை:சென்னை மாநகராட்சி புதிய முயற்சி

சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவா்கள் பாதுகாப்பாக பள்ளிக்கு செல்லும் வகையில் சாலையோரத்தில் சிறப்பு பாதைகள் அமைக்கப்படுகின்றன.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் சிட்டிஸ் திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘பள்ளிக்கு செல்ல பாதுகாப்பான சாலைகள்’ எனும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இதன்படி, பள்ளிக்கு அருகே குறிப்பிட்ட தொலைவு வரை இந்த சிறப்பு பாதை அமைக்கப்படும். சோதனை முயற்சியாக புல்லா அவென்யூ பள்ளி பகுதியில் இந்த சிறப்பு பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சிறப்பு பாதையை தவிா்த்து, பள்ளிக்கு அருகே உள்ள முக்கிய சாலைகளில் நடைபாதை, ‘ஜீப்ரா’ கிராசிங் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் சரியாக உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com