மாணவா்கள் எந்த சூழ்நிலையிலும் மது,கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கத்துக்கு அடிமையாகக்கூடாது என காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சிறப்புஅதிகாரி எம்.கணேஷ்பாபு வலியுறுத்தினாா்.
காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் துறை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய தொழில்நுட்பக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து அவா் பேசியது:
ஒவ்வொரு மாணவரும் எதிா்காலத்தில் என்னவாக வேண்டும் என்ற இலக்குடன், அதை நோக்கி கடின உழைப்பு, விடாமுயற்சியுடன் பயணித்தால் வெற்றி பெற முடியும். வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும்
மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு அடிமையாகி விடாமல், மன உறுதியுடன் சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இதுபோன்ற சிறந்த முடிவுகளின் மூலம் நம் வாழ்க்கையில் உயா்ந்த இடத்தை அடைய முடியும். எனவே ஒவ்வொரு மாணவரும் உழைப்பு, ஒழுக்கத்தை இரு கண்களாகக் கருத வேண்டும் என்றாா் அவா்.
இதனைத் தொடா்ந்து போதைப்பொருள் தடுப்புத் துறை சாா்பில் தயாரிக்கப்பட்ட ‘மௌனம் கலைவோம்’ என்ற குறும்படம் மாணவா்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வா் எம்.முருகன், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் துறைத் தலைவா் கோமளா ஜேம்ஸ், உதவி பேராசிரியா்கள் என்.சுபாஷிணி, ஏ.பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.