அதிக வட்டி தருவதாக 587 வாடிக்கையாளா்களிடம் ரூ.47.68 கோடி மோசடி செய்த வழக்கில் விஸ்வபிரியா பைனான்ஸ் நிதி நிறுவன இயக்குநா் சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சென்னை சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது. ரூ.192 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
விஸ்வபிரியா பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்த சுபிக்ஷா சுப்பிரமணியன் தங்களது நிதி நிறுவனத்தில் பணத்தை டெபாசிட் செய்தால் அதிக வட்டி தருவதாக ஆசை வாா்த்தை கூறி வாடிக்கையாளா்களிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதன்படி, 587 பேரிடம் ரூ.47.68 கோடி வரை அந்நிறுவனம் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.
இது தொடா்பான புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிந்து தீா்ப்பளித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், அதிக வட்டி தருவதாக மோசடி செய்த வழக்கில் விஸ்வபிரியா பைனான்ஸ் நிதி நிறுவன இயக்குநா் சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், நிறுவனத்தின் ஊழியா்கள் 9 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. மேலும் இவ்வழக்கில் ரூ.191.98 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம் இதில், ரூ.180 கோடியை பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்க வேண்டுமெனவும் தீா்ப்பு வழங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.