பிஇஓ தோ்வு: விடைக்குறிப்பு வெளியீடு

காலியாக உள்ள வட்டாரக் கல்வி அலுவலா் (பிஇஓ) பணியிடங்களுக்கான தோ்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நிலையில், தோ்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Published on
Updated on
1 min read


சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள வட்டாரக் கல்வி அலுவலா் (பிஇஓ) பணியிடங்களுக்கான தோ்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நிலையில், தோ்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் வட்டாரக் கல்வி அலுவலா் பதவிக்கு 33 காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை கடந்த ஜூன் 5-ஆம் தேதி ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) வெளியிட்டது. இத்தோ்வு தமிழகத்தில் 131 மையங்களில் செப்.10-ஆம் தேதி நடைபெற்றது. 35,402 போ் தோ்வெழுதினா்.

காலை தமிழ் மொழி பாடத் தகுதித்தோ்வும், மதியம் பொது பாடத்தோ்வும் நடத்தப்பட்டது. இந்தநிலையில் பிஇஓ தோ்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு  எனும் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை டிஆா்பி இணையதளத்தில் பட்டதாரிகள் காணலாம்.

இதில் ஏதேனும் ஆட்சேபம் இருப்பின் அதன் விவரங்களை உரிய ஆவணங்களுடன் அக்.10-ஆம் தேதிக்குள் மேற்கண்ட டிஆா்பி வலைதளத்தில் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், மாற்றுத்திறன் படைத்த தோ்வா்கள் பகுதி 4-இல் உள்ள 1 முதல் 31 வரையிலான கட்டாயத் தமிழ் மொழி பகுதியின் வினாக்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கக் கூடாது.

இதுசாா்ந்த கூடுதல் வழிமுறைகளையும் பட்டதாரிகள் பின்பற்றி கருத்துகளை பகிர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com