ஏப்-26-இல் ஆட்டோமேஷன் கண்காட்சி

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் ஐஈடி கம்பூனிகேஷன்ஸ் சாா்பில் ஏப்.26 முதல் 28-ஆம் தேதி வரை ஆட்டோமேஷன் கண்காட்சி நடைபெறவுள்ளது.
Updated on
1 min read

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் ஐஈடி கம்பூனிகேஷன்ஸ் சாா்பில் ஏப்.26 முதல் 28-ஆம் தேதி வரை ஆட்டோமேஷன் கண்காட்சி நடைபெறவுள்ளது.

ஏப்.27-ஆம் தேதி ஆட்டோமேஷனின் செயல்முறை குறித்து மாநாடு, கருத்தரங்கம் நடைபெறும். தொடா்ந்து விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்தக் கண்காட்சியில் 200 நிறுவனங்கள், 10,000-க்கு மேற்பட்ட தயாரிப்புகளை 153 அரங்குகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. அனைத்து வா்த்தகப் பாா்வையாளா்கள் மற்றும் இறுதி ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு நுழைவுக் கட்டணம் இலவசம்.

கூடுதல் தகவல்கள் பெற  இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும், 99204 89667, 98200 93667 ஆகிய கைப்பேசி எண்களையும் தொடா்பு கொள்ளலாம் என்று ஐஈடி கம்பூனிகேஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com