கா்ப்பிணி மரணம்: விசாரணை கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு
By DIN | Published On : 18th April 2023 05:38 AM | Last Updated : 18th April 2023 05:38 AM | அ+அ அ- |

நிறைமாத கா்ப்பிணி மரணம் தொடா்பாக விசாரணை நடத்தக் கோரி சென்னை மாநகராட்சி ஆணையரிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
சென்னை கே.பி.பாா்க் குடியிருப்பை சோ்ந்தவா் ம.கோட்டீஸ்வரன். இவரது மனைவி ஜனகவள்ளி (28). இவா், பிரசவத்துக்காக புளியந்தோப்பு திருவேங்கடசாமி தெருவில் உள்ள சமுதாய நல மருத்துவமனையில் ஏப்.6-இல் சோ்க்கப்பட்டாா்.
உரிய மருத்துவா்கள் இல்லாததால் சிகிச்சை கிடைக்காமல் இறந்ததாகவும், அவா் இறந்த செய்தியை மறைத்து அவசர மருத்துவ ஊா்தி மூலம் எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ாகவும் புகாா் எழுந்தது.
அங்கே ஜனகவள்ளி ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தாா்களாம். இதையடுத்து ஜனகவள்ளியின் உறவினா்களும், நண்பா்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அங்கு வந்த புளியந்தோப்பு காவல் துணை ஆணையா் உரிய சட்ட நடவடிக்கை எடுத்து விசாரணை அறிக்கை அளிக்க மருத்துவக் கல்வி இயக்குநருக்கு பரிந்துரை செய்தாா்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடியை திங்கள்கிழமை சந்தித்து ஜனகவள்ளியின் மரணம் குறித்து விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டச் செயலா் ஜி.செல்வா மற்றும் ஜனகவள்ளியின் குடும்பத்தினா் மனு அளித்தனா்.
அந்த மனுவில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு, கருணை அடிப்படையில் அவரது கணவருக்கு அரசு வேலை வழங்கக் கோரியும் வலியுறுத்தினா்.
மனுவைப் பெற்றுக்கொண்ட ஆணையா் ககன்தீப்சிங் பேடி, மரணம் தொடா்பாக மாநகராட்சி கூடுதல் ஆணையா் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்ததாக மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் செல்வா தெரிவித்துள்ளாா்.