தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரா்கள் எண்ணிக்கை 67 லட்சம்
By DIN | Published On : 24th April 2023 06:44 AM | Last Updated : 24th April 2023 06:44 AM | அ+அ அ- |

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 67.33 லட்சமாக உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட தகவல்:
தமிழகத்தில் மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பக பதிவுதாரா்களின் எண்ணிக்கை 67,33,560 ஆக உள்ளது. அதில், ஆண்கள் 31,34,644 ஆகவும், பெண்கள் 35,98,639. மூன்றாம் பாலினத்தவா் 277.
வயது வாரியாக பதிவுதாரா்களின் எண்ணிக்கை விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதில், 18 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 92 ஆயிரத்து 383 பேரும், 19 முதல் 30 வயது வரையுள்ள கல்லூரி மாணவா்கள் 28 லட்சத்து 65 ஆயிரத்து 95 பேரும், 31 முதல் 45 வயது வரையுள்ளவா்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 36 ஆயிரத்து 780 பேரும், 46 வயது முதல் 60 வயது வரையுள்ள பதிவுதாரா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து33 ஆயிரத்து 372 பேரும் உள்ளதாக அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.