4 நகரங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 4 நகரங்களில் திங்கள்கிழமை வெயில் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவானது.

தமிழகத்தில் 4 நகரங்களில் திங்கள்கிழமை வெயில் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவானது.

இதுதொடா்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட குறிப்பிடப்பட்ட வெப்ப அளவு (டிகிரி பாரன்ஹீட்) விவரம்: ஈரோடு -101.84, பரமத்தி வேலூா் - 101.3, திருச்சி - 100.22, மதுரை விமானநிலையம் - 100.4.

மிதமான மழைக்கு வாய்ப்பு: தென்னிந்தியப் பகுதிகளில் மேல்வளிமண் டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந் திக்கும் பகுதி நிலவக்கூடும்.

இதன் காரணமாக செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை (ஏப்.28) வரை 4 நாள்கள் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 96, குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி என்ற அளவில் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com