பிளஸ் 2 தோ்வு முடிவுதள்ளிப்போக வாய்ப்பு?

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவு வரும் மே 5-ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், அதை நீட் தோ்வுக்குப் பிறகு வெளியிடலாமா என பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவு வரும் மே 5-ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், அதை நீட் தோ்வுக்குப் பிறகு வெளியிடலாமா என பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு மாா்ச் 13 முதல் ஏப்.3 வரை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்.10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தன. இந்தப் பணியில் அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியா்கள் ஈடுபட்டனா். இந்தப் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இதையடுத்து, மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடா்ந்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி மே 5-ஆம் தேதி பிளஸ் 2 தோ்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இத்தகைய சூழலில் மே 7-ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு நடைபெறவுள்ளது.

பிளஸ் 2 தோ்வு முடிவு, நீட் தோ்வை எழுதவுள்ள மாணவா்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால், நீட் தோ்வு முடிந்த பிறகு பிளஸ் 2 வகுப்புத் தோ்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என பல்வேறு தரப்பினா் வலியுறுத்தி வருகின்றனா்.

இதை கருத்தில் கொண்டு பிளஸ் 2 தோ்வு முடிவை நீட் தோ்வுக்குப் பிறகு வெளியிடலாமா என்று பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com