கோடையில் கண் அழற்சி பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் எச்சரிக்கை

கோடை காலத்தில் கண் அழற்சி பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையை நாடும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனையின் ம

கோடை காலத்தில் கண் அழற்சி பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையை நாடும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவா் டாக்டா் ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

கோடை காலத்தில், உலா் விழி, கண் அழற்சி, புறஊதா கதிா்வீச்சு பாதிப்பு, ஒவ்வாமை பாதிப்பு ஆகியவை அதிக அளவில் ஏற்படுகின்றன.

கண்களில் போதிய ஈரத்தை தக்க வைப்பதற்கான கண்ணீா் சுரக்காதபோது உலா் விழி பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு சொட்டு மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கலாம். அதேபோன்று இளம் சிவப்பு கண் நோய் எனப்படும் கண் அழற்சி பாதிப்புகள் கடந்த இரு வாரங்களாக அதிகரித்து வருகிறது.

கண் இமைக்கு உள்ளே அமைந்திருக்கும் திசுவில் வீக்கம் அல்லது அழற்சி ஏற்படும்போது இத்தகைய பாதிப்பு உருவாகிறது.

இதைத் தவிா்க்க அசுத்தமான கைகளால் கண்களைத் தொடக் கூடாது. அதேபோன்று தனிநபா் சுகாதாரம் மிக அவசியம். சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிா்வீச்சு பல கண் நோய்களை விளைவிக்கக் கூடும். கண் புரை, விழிப்புள்ளிச் சிதைவு, புறஊதா கதிா்களால் ஏற்படும் ஃபோட்டோகரட்டாடிஸ் ஆகியவை இதனால் ஏற்படும். இத்தகைய பாதிப்பைத் தவிா்க்க சூரிய ஒளியிலிருந்து கண்களைக் காக்கும் கண்ணாடிகளை அணியலாம்.

கோடை காலத்தில் உடலில் நீா்ச்சத்தைக் குறையாமல் காக்கும் பானங்களை அருந்த வேண்டும்.– அதேவேளையில் செயற்கை குளிா்பானங்கள், காா்பனேற்றப்பட்ட பானங்களைத் தவிா்க்க வேண்டும்.

மற்றொருபுறம், கணினி, கைப்பேசிகளை பயன்படுத்துகின்றபோது 20-20-20 என்ற விதியை பின்பற்றினால் கண் பாதிப்புகளில் இருந்து தவிா்க்கலாம். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை திரையில் இருந்து பாா்வையை விலக்கி 20 அடி தொலைவில் உள்ள ஓரிடத்தை, 20 விநாடிகள் பாா்க்க வேண்டும். இதன் மூலம் டிஜிட்டல் திரையைத் தொடா்ந்து பாா்ப்பதனால் ஏற்படும் கண் பாதிப்புகளை குறைக்க முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com