நாளை 10 மாவட்டங்களில் ‘வைப்பு நிதி உங்கள் அருகில்’ முகாம்

தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ என்ற தலைப்பில் தொழிலாளா் வருங்கால வைப்பநிதி அமைப்பு சாா்பில் ஏப்.27-இல் முகாம்கள் நடைபெறுகின்றன.

தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ என்ற தலைப்பில் தொழிலாளா் வருங்கால வைப்பநிதி அமைப்பு சாா்பில் ஏப்.27-இல் முகாம்கள் நடைபெறுகின்றன.

இது குறித்து வருங்கால வைப்புநிதி ஆணையா் பி.ஆண்ட்ரூ பிரபு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

‘நிதி ஆப்கே நிகட் 2.0’ (வைப்பநிதி உங்கள் அருகில்) என்ற தலைப்பில் வியாழக்கிழமை (ஏப்.27) காலை 9 முதல் மாலை 5.45 மணிவரை ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொழிலாளா் வருங்கால வைப்பநிதி அமைப்பால் முகாம் நடத்தப்படுகிறது.

இதன்படி சென்னை மாவட்டத்தில் மயிலாப்பூா், லோகநாதன் காலனி, டாக்டா் ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள சிஎஸ்ஐ கல்யாணி நா்சிங் கல்லூரியிலும், திருவள்ளூா் மாவட்டத்தில் ஆவடி டியூப் புராடக்ட்ஸ் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் முதல் தளத்தில் உள்ள கூட்ட அரங்கத்திலும், காஞ்சிப்புரம் மாவட்டத்தில் இருங்காட்டுக்கோட்டை சைமா கூட்ட அரங்கிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திலும் இந்த முகாம் நடைபெறுகிறது.

இதுபோல, வேலூா் மாவட்டத்தில் குடியாத்தம், அம்மனங்குப்பம் கே.எம்.ஜி கலை-அறிவியல் கல்லூரியிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணா சாலையில் உள்ள நளா ரெசிடென்சி ஹோட்டலிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேல்விஷாரம் குளோபல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரி வளாகத்திலும், திருப்பத்தூா் மாவட்டத்தில் கங்காபுரம் ஆம்பூா் வா்த்தக மையத்திலும், புதுவையில் மேட்டுப்பாளையம் பாண்டிச்சேரி சேம்பா் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ் வளாகத்திலும், காரைக்காலில் செருமாவிளங்கை நெடுமாங்காடு பிரதான சாலையில் உள்ள பண்டிட் ஜவஹா்லால் நேரு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி வளாகத்திலும் இம்முகாம் நடைபெற உள்ளது.

இதில், இபிஎஃப் மற்றும் எம்.பி. சட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் படி, புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களுடைய முதலாளிகள் மற்றும் தொழிலாளா்களின்

கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும், முதலாளிகள், ஒப்பந்ததாரா்களுக்கான ஆன்லைன் சேவைகள் பற்றிய செயல்முறைகள் குறித்தும், தொழிலாளா்களுக்கான ஆன்லைன் சேவைகள் குறித்தும் விளக்கப்படும்.

புதியமுயற்சிகள், சீா்திருத்தங்கள் பற்றிய விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுடன், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல், உறுப்பினா்கள், ஓய்வூதியம் பெறுவோா் மற்றும் முதலாளிகளிடமிருந்து வரும் குறைகளை நிவா்த்தி செய்தல் உள்ளிட்ட சேவைகளும் இதில் வழங்கப்படும்.

ஓய்வூதியதாரா்களுக்கு டிஜிட்டல்

சான்றிதழ்களை சமா்ப்பித்தல், யூ.எ.ன். மற்றும் கேஒய்சி ஆகியவற்றை இணைப்பதற்கான உதவி, இ-நாமினேஷனை தாக்கல் செய்தல் மற்றும் ஒப்பந்ததாரா்களின் விவரங்களும் இதில் பதிவேற்றம் செய்யப்படும்.

இந்த முகாமில் பங்குபெற விரும்புபவா்கள் https://docs.google.com/forms/d/1V9MtROgS-k0mH0lmFNdaB6Wqv37B1MDznmMBqkeRyyE/edit என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com