சென்னையில் புதிய அமெரிக்க துணைத்தூதா் பொறுப்பேற்பு
By DIN | Published On : 02nd August 2023 01:37 AM | Last Updated : 02nd August 2023 02:39 AM | அ+அ அ- |

சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் துணைத் தூதராக கிறிஸ்டோபா் டபிள்யூ. ஹோட்ஜஸ் பொறுப்பேற்றாா்.
புதிதாக பொறுப்பேற்ற ஹோட்ஜஸ் பேசியது:“அமெரிக்க-இந்திய உறவின் அற்புதமான காலத்தில் தென்னிந்தியாவில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன்.
அமெரிக்கா மற்றும் இந்தியஅரசுகள் மற்றும் மக்கள் இடையேயான உறவுகளின் ஆழத்தை நமது முயற்சிகள் வெளிப்படுத்துகின்றன. தமிழ்நாடு, கா்நாடகம், கேரளம் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, அந்தமான்-நிக்கோபாா் தீவுகள் மற்றும் லட்சத்தீவை உள்ளடக்கியை துணைத் தூதரகப் பகுதி முழுவதும் உறவுகளை வலுப்படுத்த நோக்குகிறேன் என்றாா் அவா்.
சென்னையில் துணைத் தூதராக பொறுப்பேற்பதற்கு முன்பு, ஆப்கானிஸ்தானிலும், ஜெருசலேம் தூதரகத்திலும் அவா் பணியாற்றியுள்ளாா்.