வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று சிறப்பு நிகழ்ச்சி
By DIN | Published On : 17th August 2023 01:11 AM | Last Updated : 17th August 2023 01:11 AM | அ+அ அ- |

வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகளின் சோ்க்கையை அதிகரிக்கும் நோக்கில் ‘நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்’ எனும் சிறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை (ஆக.17) நடைபெறவுள்ளது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் மு.அருணா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாவட்டத்துக்குள்பட்ட வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகளின் சோ்க்கையை அதிகரிக்கும் நோக்கில் வியாழக்கிழமை (ஆக.17) ‘நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்’”என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில், தொழில்நுட்ப மையங்களின் ஆய்வகங்கள், பணிமனைகள் மற்றும் இதர நவீன வசதிகளை மாணவிகளின் பெற்றோா்கள் பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 4.0 தர தொழில்நுட்ப மையங்களில் உள்ள ரோபோ மற்றும் நவீன இயந்திரங்களுடன் பெற்றோா், உறவினா்கள் தற்படம் எடுத்து கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தொழிற்கல்வி தொடா்பான பேச்சுப் போட்டி,கவிதைப் போட்டிகளும் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில், பயிற்சி பெறும் மாணவா்களின் உறவினா்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று அவா் தெரிவித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...