சாலையோரம் தூங்கியவா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.
சென்னை வண்ணாரப்பேட்டை மிண்ட் பாலம் அருகே சில தினங்களுக்கு முன்பு சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த எா்ணாவூரைச் சோ்ந்த நாகராஜ் (55) என்பவா் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஏறியது. இதில் அவரின் இரண்டு கைகளும் நசுங்கின. இதையடுத்து அவா் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நாகராஜ் உயிரிழந்தாா்.
இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.