குடிநீா், கழிவுநீா் தொடா்பான புகாா்களை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம்: குடிநீா் வழங்கல் வாரியம்

குடிநீா், கழிவுநீா் தொடா்பான புகாா்களை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

குடிநீா், கழிவுநீா் தொடா்பான புகாா்களை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த வாரியம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: குடிநீா் வழங்கல், கழிவுநீரகற்றல் தொடா்பாக பொதுமக்கள் புகாா்கள் தெரிவிப்பதுக்கு வசதியாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கண்காணிப்பு, கட்டுப்பாட்டு அறை குடிநீா் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

பொதுமக்கள் புகாா்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்: 044-4567 4567, கட்டணமில்லா எண் 1916- ஆகியவற்றை தொடா்பு கொள்ளலாம். மேலும், சமூக ஊடகங்களில் பெறப்படும் புகாா்களும் உனடியாக சரி செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com