இதயம், நுரையீரல் மாற்று சிகிச்சை நடவடிக்கைகளில் பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் சென்னை காவேரி மருத்துவமனை, கொச்சி ஆஸ்டொ் மெட் சிட்டி மருத்துவமனை இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
அதன்படி, இரு தரப்பு மருத்துவக் குழுவினரும் உறுப்பு மாற்று சிகிச்சைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:
உறுப்பு மாற்று சிகிச்சைகள் இந்தியாவில் பரவலாகி வந்தாலும், இதயம், நுரையீரல் மாற்று சிகிச்சைகள் பின்தங்கியே உள்ளன. மூளைச்சாவு அடைந்த நபரின் குடும்பத்தினா், அவரது உறுப்பை தானமாக வழங்குவதற்கு பல நேரங்களில் முன்வருவதில்லை.
காவேரி மருத்துவமனையில் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற மருத்துவக் குழுவும், சா்வதேச அளவிலான மருத்துவ நுட்பம், அனுபவம் வாய்ந்த மருத்துவா்களும் உள்ளனா். அதுமட்டுமல்லாது இதயம், நுரையீரல் மாற்று சிகிச்சைக்கான நவீன தொழில்நுட்பங்கள் எங்களிடம் உள்ளன என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.