திசைகாட்டிகள்: எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார்

 இன்றைய இளந்தலைமுறையினர் தாங்கள் சார்ந்த துறைகள் அல்லது தங்களுக்குப் பிடித்தமான துறைகள் சார்ந்த புத்தகங்களை வாங்கிப் படிக்கத் தொடங்க வேண்டும்.
எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார்
எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார்
Updated on
1 min read

 இன்றைய இளந்தலைமுறையினர் தாங்கள் சார்ந்த துறைகள் அல்லது தங்களுக்குப் பிடித்தமான துறைகள் சார்ந்த புத்தகங்களை வாங்கிப் படிக்கத் தொடங்க வேண்டும். சிறந்த புத்தகங்களுக்கு கடைசிப் பக்கம் இல்லை. அந்தப் புத்தகமானது வாசிப்பவரை அடுத்த புத்தகத்துக்கு அழைத்துச் செல்லும் வலிமையுடையதாக இருக்கும்.
 புத்தகங்கள் என்றாலே இலக்கியம் சார்ந்தவை என்ற மனநிலை உள்ளது. அது சரியல்ல. தற்போது மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் துறை சார்ந்த புத்தகங்களும் அனைவரும் படிக்கும் வகையில் வெளியிடப்படுகின்றன.
 வரலாறு என்பது மன்னர்கள் அல்லது நாடுகள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. தொலைக்காட்சி முதல் அனைத்து வகை சாதனங்களுக்கும் ஆரம்பம் முதல் அவை அடுத்தகட்ட வளர்ச்சியடைந்தது வரையிலான வரலாறுகள் உண்டு.
 அதுபோன்ற புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஆகவே நமக்குப் பிடிக்கும் உணவைத் தேடிப்போய் உண்பது மாதிரிதான் விரும்பிய புத்தகத்தை தேடிப் பிடித்து படிக்க வேண்டும்.
 ஒருவருக்கு இடங்களைச் சுற்றிப்பார்ப்பதில் அதிக ஆர்வம் உண்டு எனில் அவர்கள் இறையன்பு போன்றவர்களின் சுற்றுலா சார்ந்த புத்தகங்களைப் படிக்கலாம். மொத்தத்தில் வாசிப்பின் மீது விருப்பத்தை ஏற்படுத்திக் கொள்வதே முக்கியம். மகாகவி பாரதியைப் படித்த பிறகே எனக்கு திருவள்ளுவரையும் கம்பனையும் படிக்கத் தோன்றியது.
 படைப்பாளியைப் போலவே புத்தகத்தைப் படிப்போரும் பல்துறை அறிவாற்றலோடு விளங்கும்போதுதான் அதிகமான நல்ல புத்தகங்கள் வெளியிடப்படும். இளைஞர்கள் தாம் சார்ந்த, விரும்புகிற துறைகள் குறித்த புத்தகங்களைப் படிப்பதை வழக்கமாக்கினால், அவர்கள் பல்துறை அறிவாற்றலோடு விளங்கும் வகையில் சிறந்த வாசிப்பாளராகிவிடுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com