

காணும் பொங்கலையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் ஜனவரி 15-ஆம் தேதி முதல் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. பொங்கல் பண்டிகையின் இறுதி நிகழ்வான காணும் பொங்கலான இன்று பொது இடங்களில் மக்கள் குவிந்துள்ளனர்.
காணும் பொங்கலான இன்று தமிழகம் முழுவதும் பொது இடங்களில் மக்கள் கூட்டத்தை சமாளிக்க காவல்துறையினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
சென்னை கடற்கரைகளில் மட்டும் சுமார் 1,200 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரைகளில் இன்று பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு அதிநவீன டிரோன்கள் மூலம் கண்காணிப்பு பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஹெலிகாப்டர் மூலமும் பொதுமக்களை கண்காணிக்கின்றனர்.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் இன்று பிற்பகல் முதல் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜீப்பில் சென்றபடி காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, கடற்கரையோரம் கூடியுள்ள மக்களை சந்தித்து டிஜிபி சைலேந்திர பாபு வாழ்த்து தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.