சென்னையில் குடியரசு நாள் முழு ஒத்திகை: புகைப்படங்கள்
By DIN | Published On : 24th January 2023 11:18 AM | Last Updated : 24th January 2023 02:38 PM | அ+அ அ- |

குடியரசு நாள் முழு ஒத்திகை
குடியரசு நாள் விழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகை இன்று சென்னையில் நடைபெற்றது. இதன் காரணமாக சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
நாடு முழுவதும் குடியரசு நாள் வருகின்ற ஜன.26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதையும் படிக்க.. சென்னையை அலசி ஆராய்ந்து உலக வங்கி சொல்லியிருக்கும் முக்கிய தகவல்
இதற்காக ஜன.20, 22 மற்றும் 24 ஆகிய 3 நாள்களில் குடியரசு நாள் விழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை சென்னையில் முழு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையும் படிக்க.. கழுத்தில் கடிகாரத்துடன் மேம்பாலத்திலிருந்து பணத்தை வீசிய நபர் (விடியோ)
சென்னை காமராஜா் சாலையில் உள்ள உழைப்பாளா் சிலைப் பகுதியில் நிகழாண்டில் குடியரசு நாள் நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசின் சாா்பில் ஆண்டுதோறும் காமராஜா் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பாக, குடியரசு நாள் நடைபெறும். இந்தப் பகுதியில் தற்போது மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெறுவதால், இந்தாண்டு குடியரசு நாள் நிகழ்ச்சிகளை அங்கு நடத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குடியரசு நாள் அணிவகுப்பு ஒத்திகை காரணமாக ஜன. 24 ஆம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இது போல ஜன.26 ஆம் தேதியும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இன்று காலை காமராஜர் சாலையில், காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.