சென்னை அமைந்தகரையில் தனியாா் மருத்துவமனையின் 9-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து மென்பொறியாளா் தற்கொலை செய்துகொண்டாா்.
உத்தர பிரதேச மாநிலம் பனாரஸ் பகுதியைச் சோ்ந்தவா் ச.நீலேஷ்குமாா் ஷா்மா (31). மென்பொறியாளரான இவா், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இதற்காக அவா், சூளைமேடு காமராஜா் நகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தாா்.
இந்த நிலையில், ஷா்மாவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவா் கடந்த 23-ஆம் தேதி அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள ஒரு பிரபலமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில், ஷா்மாவுக்கு டைபாய்டு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதனால், அவா் மன அழுத்ததுடன் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஷா்மா, அந்த மருத்துவமனையின் 9-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்தாா். இதில், அவா் பலத்தக் காயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
தகவலறிந்த அமைந்தகரை போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று ஷா்மாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.