சைக்கிளில் பணிக்கு வரும் காவல்துறை ஆய்வாளர் புஷ்பராணி: பலருக்கும் முன்மாதிரியாகிறார்

தமிழ்நாடு காவல்துறையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் புஷ்பராணி, தினமும் சைக்கிளில்தான் பணிக்கு வருகிறார்.
சைக்கிளில் பணிக்கு வரும் காவல்துறை ஆய்வாளர் புஷ்பராணி: பலருக்கும் முன்மாதிரியாகிறார்
சைக்கிளில் பணிக்கு வரும் காவல்துறை ஆய்வாளர் புஷ்பராணி: பலருக்கும் முன்மாதிரியாகிறார்


சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் புஷ்பராணி, தினமும் சைக்கிளில்தான் பணிக்கு வருகிறார். இவரைப் பார்க்கும் பலருக்கும் இவர் முன்மாதிரியாக மாறி வருகிறார்.

பூக்கடை காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் 45 வயதாகும் புஷ்பராணி, சௌகார்பேட்டையிலிருந்து பூக்கடை காவல்நிலையத்துக்கு நாள்தோறும் சைக்கிளிலேயே சென்று வருகிறார் புஷ்பராணி.

வேலையில்லாத இளைஞர்கள் கூட, தந்தை காசில் பைக் வாங்கிக் கொண்டு சாலையில் பறக்கும் காலக்கட்டத்தில், காவல்துறை ஆய்வாளராக இருக்கும் புஷ்பராணி, சைக்கிளிலேயே சென்று வருகிறார். இது ஏதோ ஊடக விளம்பரத்துக்காக அல்ல, கடந்த 23 ஆண்டுகளாக அவர் தனது போக்குவரத்து வாகனமாக சைக்கிளையே பயன்படுத்தி வருகிறார்.

தமிழ்நாடு சிறப்புக் காவல்துறையில் இரண்டாம் நிலை தலைமைக் காவராக பணியில் சேர்ந்தவர் புஷ்பராணி. அவரது தந்தையும் காவல்துறை ஆய்வாளராக இருந்து ஓய்வுபெற்றவர். அவர்தான் எனக்கு பாதுகாப்பாக சைக்கிள் ஓட்டப் பழக்கியிருந்தார். அதன்பிறகு நான் எப்போதும் சைக்கிளை விடவேயில்லை.

காவல்நிலையம் செல்வது மட்டுமல்ல, காவல்நிலையத்திலிருந்து காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கும் அவர் சைக்கிளிலேயே சென்று வருவார்.

இவரைப் பார்க்கும் பல பெண் வியாபாரிகளும் தற்போது சைக்கிள் ஒன்றை வாங்கிக் கொண்டு அதன் மூலம் கடைகளுக்குச் சென்று வருகிறார்கள். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் சிலர் இது பற்றி கூறுகையில், புஷ்பராணி மேடமே சைக்கிளில் செல்லும் போது நாங்கள் ஏன் செல்லக் கூடாது என்று தோன்றியது. உடனே சைக்கிளை வாங்கிவிட்டோம். இப்போது வீட்டிலிருந்து 5 கிலோ மீட்டருக்கு சைக்கிளில்தான் மார்க்கெட்டுக்கு வருகிறோம் என்கிறார்கள் சிரித்தபடி.

இது உடலுக்கு மட்டுமல்ல, பணத்தையும் மிச்சம் பிடிக்கிறது என்கிறார்கள்.

இது குறித்து புஷ்பராணி கூறுகையில், நான் யாரையும் சைக்கிள் ஓட்டுமாறு வற்புறுத்த மாட்டேன். என்னையும் சைக்கிளை விட்டுவிட்டு பைக் வாங்குமாறு கூறினால் அதை ஏற்க மாட்டேன் என்கிறார் உறுதியோடு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com