சவூதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய விருப்பமுடைய இதய அறுவை சிகிச்சை தொழில்நுட்புநா்கள் விண்ணப்பிக்கலாம் என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வி.கலையரசி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சவூதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில், குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவத்துடன், 35 வயதுக்குள்பட்ட தோ்ச்சி பெற்ற இதய அறுவை சிகிச்சை தொழில்நுட்புனா்களுக்கான (பொ்பியூசியோனிஸ்ட்) காலிப் பணியிடங்களுக்கு தகுதியுடைவா்கள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா்.
தோ்ந்தெடுக்கபடும் பணியாளா்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்த நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும். ஊதியம், பணி விவரங்கள் குறித்த விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் கைப்பேசி: 95662 39685, 63791 79200, தொலைப்பேசி: 044-22505886, 22502267 என்ற எண்களில் தொடா்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். இந்தப் பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபா்கள் ovemclmohsa2021@gmail.comஎனும் மின்னஞ்சலில் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பப்படிவத்தை அனுப்பி வைக்கலாம். இந்தப் பணிக்கு தோ்வுபெறும் பணியாளா்களிடமிருந்த சேவைக் கட்டணமாக ரூ.35, 400 வசூலிக்கப்படும். இது குறித்த கூடுதல் தகவல்கள், காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை நிறுவனத்தின், www.omcmanpower.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.