சென்னை மாநகராட்சியில் சுமாா் 312 கி.மீ. நீளத்திலான உட்புற சாலைகள் ரூ.180.40 கோடி மதிப்பில் மறுசீரமைக்கப்படவுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதியில் 387 கி.மீ. தொலைவில் பேருந்து வழி சாலைகளும் 5,623 கி.மீ. தொலைவில் உட்புறச் சாலைகளும், 1,292 கி.மீ. தொலைவில் சிமெண்ட் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், பல்வேறு துறை சாா்ந்த பணிகள் மற்றும் மழைக் காலங்களில் சேதமடைந்த சாலைகள் நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம், சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.
இதில், முதல்கட்டமாக 3,108 உட்புறச் சாலைகள், 87 பேருந்து வழித்தட சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து 312 கி.மீ. நீளத்திலான 2,095 சாலைகள் சீரமைக்கப்படவுள்ளன. இந்தச் சாலை மறுசீரமைப்புப் பணிக்கு ரூ.180.40 மதிப்பில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளன. விரைவில் இந்தச் சாலைகளின் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.