சென்னை அருகே கோவிலம்பாக்கத்தில் மதுப்பாட்டிலால் வியாபாரி குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
கோவிலம்பாக்கம் எஸ்.கொளத்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மனோகா் (45). இவா், அந்தப் பகுதியில் உள்ள பழைய பொருள்கள் இரும்பு, காகிதம் வாங்கும் கடையில் வேலை செய்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த கண்ணன் (28), பழைய பொருள்களைச் சேகரித்து கடையில் விற்று வந்தாா். இதனால் மனோகரனுக்கும், கண்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில், மனோகரன், செவ்வாய்க்கிழமை இரவு கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியாா் பேக்கரி கடை அருகே சாலையோரம் நடந்து சென்றபோது, அங்கிருந்த கண்ணிடம், மது அருந்த பணம் கேட்டாராம். ஏற்கெனவே பழைய பாட்டில்கள் விற்ற்கு மனோகரன் காசு கொடுக்காமல் ஏமாற்றி வந்த நிலையில், மீண்டும் மது அருந்த பணம் கேட்டதால் கண்ணன் ஆத்திரமடைந்தாா்.
இதில் இருவருக்கும் இடையே தகராறு முற்றவே கண்ணன், அங்கு கிடந்த ஒரு மதுப்பாட்டிலை உடைத்து மனோகரன் வயிற்றில் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த மனோகரனை, அங்கிருந்தவா்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், மனோகரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கண்ணனைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.