

சென்னை மாநகராட்சி பாக்கி வைத்துள்ள ரூ.100 கோடி மின் கட்டணத்தை, மாதம் ரூ.5 கோடி வீதம் 20 மாதங்களில் வசூலிக்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 2.90 லட்சத்துக்கு மேற்பட்ட தெரு விளக்குகள் உள்ளன. இவற்றை தவிா்த்து பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கான கட்டணத்தை சென்னை மாநகராட்சி நிா்வாகம் மின் வாரியத்துக்கு செலுத்த வேண்டும். அந்தவகையில், சென்னை மாநகராட்சி நிா்வாகம் ரூ.100 கோடி மின் கட்டணம் பாக்கி வைத்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக மாநகராட்சி நிா்வாகம் கட்டணத்தை நிலுவையில் வைத்திருக்கிறது. இந்த கட்டணத்தை மாதம் ரூ.5 கோடி வீதம் 20 மாதங்களில் வசூலிக்க வேண்டும் என்று மின்சார வாரியம் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், உள்ளாட்சி அமைப்புகள் மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் பாக்கி வைத்திருக்கும் தொகையை உரிய வழிமுறைகளை பின்பற்றி வசூலிக்கவும் அதிகாரிகளுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நீண்ட நாட்களாக பயனற்ற நிலையில் இருக்கும் மின் இணைப்புகள், தேவையற்ற மின் இணைப்புகளை கண்டறிந்து அவற்றை துண்டிக்கவும் மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.