இன்னும் 10 நாள்கள்தான்.. ஒட்டுமொத்த சென்னையையும் ஒரே இடத்திலிருந்து பார்க்கலாம்

சுமார் 12 ஆண்டுகள் ஆகிவிட்டன, அண்ணாநகர் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்துவிடப்பட்டு. இந்த நிலையில்தான் அந்த இனிப்பான செய்தி வெளியாகியிருக்கிறது.
இன்னும் 10 நாள்கள்தான்.. ஒட்டுமொத்த சென்னையையும் ஒரே இடத்திலிருந்து பார்க்கலாம்


சுமார் 12 ஆண்டுகள் ஆகிவிட்டன, அண்ணாநகர் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்துவிடப்பட்டு. இந்த நிலையில்தான் அந்த இனிப்பான செய்தி வெளியாகியிருக்கிறது.

அதாவது, இன்னும் 10 நாள்களில் ஒட்டுமொத்த சென்னையையும் ஒரே இடத்திலிருந்து அண்ணாநகர் கோபுரத்தின் மீதேறி பார்க்கலாம் என்கிறார் மாநகராட்சி மூத்த அதிகாரி.

1960ஆம் ஆண்டு அண்ணாநகரில் அமைந்திருக்கும் இந்த  கோபுரம் கட்டப்பட்டது. அது முதல் பொதுமக்கள் சுற்றிப் பார்க்க அனுமதியும் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 2011ஆம் ஆண்டு ஒரு தம்பதி கோபுரத்தின் மீதேறி குதித்துத் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அது பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு பூட்டியே வைக்கப்பட்டிருந்தது.

இன்னும் பத்து நாள்களில் அண்ணாநகர் கோபுரம் திறக்கப்படவிருக்கிறது. இன்னும் அதற்கான தேதி உறுதி செய்யப்படவில்லை என்று மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். அதற்கு முன்பு, கோபுரம் மேல் பகுதி முற்றிலும் இரும்புக் கம்பிகளால் மூடப்பட்டுள்ளது. நல்ல வேலைப்பாடு செய்யப்பட்டு, பொதுமக்கள் பார்த்து ரசிக்கும் வகையில் தயாராகி வருகிறது.

100 அடி உயரம் கொண்ட 12 தளங்களுடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோபுரம், தற்கொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்தது. இந்த கோபுரத்தைச் சுற்றி வர்ண பூச்சு மற்றும் ஓவியங்கள் வரையும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. அது கடந்த மாதமே முடிந்திருந்தால், எப்போதோ மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டிருக்கும் பணி தாமதமானதால், கோபுரம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. கோபுரம் மூடப்பட்டிருந்தாலும், அண்ணாநகர் கோபுரம் பூங்கா வழக்கம் போல மக்கள் பயன்பாட்டில்தான் இருந்து வந்தது.

இன்னும் 3 அல்லது 4 நாள்களில் ஒட்டுமொத்தமாக ஓவியம் வரையும் பணிகள் நிறைவு பெற்றுவிடும். மற்ற பணிகளும் நிறைவு பெற்றதும் பத்து நாள்களில் கோபுரம் திறக்கப்பட்டுவிடும் என்கிறார்கள் அதிகாரிகள்.

இதுவரை கோபுரத்தின் மீது ஏறாதவர்களும், பல முறை ஏறி அந்த அனுபவத்தை ருசித்தவர்களும், அந்த இனிய நாளுக்காகக் காத்திருக்கிறார்கள். 

இந்த அண்ணாநகர்  கோபுரமானது 1968ஆம் ஆண்டு வர்த்தகம் மற்றும் தொழில் கண்காட்சிக்காக கட்டப்பட்டது. அது முதல் அண்ணாநகரின் அடையாளமாகவே மாறிவிட்டது. இந்த கோபுரம் திறக்கப்பட்டால், பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com