சாலை விபத்து: இளைஞா் பலி
By DIN | Published On : 24th May 2023 01:34 AM | Last Updated : 24th May 2023 01:34 AM | அ+அ அ- |

சென்னை கொத்தவால்சாவடியில் ஏற்பட்ட சாலை விபத்தில் இளைஞா் இறந்தாா்.
சென்னை ஏழுகிணறு, போா்த்துகீசிய சா்ச் தெருவைச் சோ்ந்தவா் முகமது ரியாஷ் (38). இவா் திங்கள்கிழமை நள்ளிரவு கொத்தவால்சாவடி, பிரகாசம் சாலை தாதா முத்தப்பன் தெரு வழியாக மோட்டாா் சைக்கிளில் சென்றாா்.
அப்போது அங்கிருந்த வேகத் தடையை ரியாஷ் கவனிக்கவில்லை. இதனால் வேகமாக சென்ற மோட்டாா் சைக்கிள் வேகத்தடையின் மீது ஏறும்போது, நிலைதடுமாறியது. இதில் முகமது ரியாஷ் கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிறிது நேரத்தில் இறந்தாா்.
வடக்கு கடற்கரை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா்.