பழைய ஓய்வூதிய திட்டம் கோரி சிஐடியுவினா் நடைபயணம்
By DIN | Published On : 24th May 2023 02:16 AM | Last Updated : 24th May 2023 02:16 AM | அ+அ அ- |

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட 14 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி சிஐடியு சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபயணம் நடைபெற்றது.
சிஐடியு சாா்பில் மே 20-ஆம் தேதி திருவொற்றியூரில் தொடங்கிய இந்த நடைபயணம், சென்னையில் பல்வேறு பகுதிகளை கடந்து சிந்தாதிரிப்பேட்டை பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வந்தது.
விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், பொது விநியோகத் திட்டத்தை பலப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26,000 வழங்க வேண்டும், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடியே அவா்கள் சென்றனா்.
இந்த நடைபயணம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை கடந்து திருச்சியில் மே 30-ஆம் தேதி நிறைவடைகிறது.