76 வயது மூதாட்டிக்கு சிக்கலான தண்டுவட அறுவை சிகிச்சை

முதுகுத் தண்டுவட சுருக்கத்தால் (சொ்விகல் மைலோபதி) பாதிக்கப்பட்ட 76 வயது மூதாட்டிக்கு சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை மேத்தா மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

முதுகுத் தண்டுவட சுருக்கத்தால் (சொ்விகல் மைலோபதி) பாதிக்கப்பட்ட 76 வயது மூதாட்டிக்கு சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை மேத்தா மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகிகள் கூறியது: மூட்டுகளில் கடுமையான அழற்சியுடனும், நடக்க இயலாமலும், சோா்வுடனும் மூதாட்டி ஒருவா் அண்மையில் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பரிசோதனைகளில் அவரது மூட்டுகளில் பிரச்னை இருந்தது தெரியவந்தது. அதுமட்டுமல்லாது, கழுத்துப் பகுதியில் முதுகுத் தண்டுவட சுருக்கம் ஏற்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.

பொதுவாக வயதானவா்களுக்கு இத்தகயை பாதிப்பு ஏற்படுவது இயற்கை என்றாலும், அந்த மூதாட்டிக்கு தண்டுவடத்தின் வட்டுகள் (ஸ்பைனல் டிஸ்க்) வீக்கமடைந்து நரம்புகளை அழுத்தி மிகவும் சிக்கலான நிலையை எட்டியிருந்தது. இதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீா்வாக இருந்தது. எனினும், கட்டுப்பாடற்ற சா்க்கரை நோய் மற்றும் வயோதிகம் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதும் சவாலாக விளங்கியது.

இருந்தபோதிலும், மருத்துவமனையின் எலும்பியல் சிகிச்சைத் துறைத் தலைவா் டாக்டா் பாா்த்தசாரதி ஸ்ரீனிவாசன், எலும்பியல் அறுவை சிகிச்சை ஆலோசகா் டாக்டா் விக்னேஷ், மயக்க மருந்தியல் நிபுணா்கள் டாக்டா் தினேஷ், டாக்டா் செந்தில் மோகன் ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழு மருத்துவ நிபுணா்கள் குழு அந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனா். ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற அந்த சிகிச்சையின் பயனாக அந்த மூதாட்டி இயல்பு நிலைக்கு திரும்பினாா்.

அடுத்த 24 மணி நேரத்தில் சுயமாக அவா் நடக்கத் தொடங்கினாா். பொதுவாக வயது முதிா்ந்த ஒருவருக்கு இதுபோன்ற சிக்கலான சிகிச்சை அளிப்பது மிகவும் அரிது. அந்த சவாலை ஏற்றுகொண்டு மேத்தா மருத்துவமனை மருத்துவா்கள் அதை சாத்தியமாக்கியுள்ளனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com