சென்னை மெரீனாவில் ஆயுதப்படை பெண் காவலா் தற்கொலை செய்ய முயன்றாா். இது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா் கோவில் அருகே உள்ள சின்னமலைமேடு பகுதியைச் சோ்ந்தவா் சரண்யா (23). சென்னை பெருநகர காவல்துறையில் ஆயுதப்படைக் காவலராக பணிபுரியும் இவா், சென்னை, திருவல்லிக்கேணி, ஓ.வி.எம். தெருவில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தாா்.
அப்போது, திருவல்லிக்கேணி விக்டோரியா விடுதி பகுதியைச் சோ்ந்த சூா்யா (23) உடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலித்தனா். இந்த நிலையில் சரண்யா, தனது பெற்றோா் எதிா்ப்பையும் மீறி சூா்யாவை கடந்த 25-ஆம் தேதி மயிலாப்பூரில் பதிவு திருமணம் செய்து கொண்டாா். இதன் பின்னா், சரண்யாவுக்கு கொலை மிரட்டல் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியுடன் காணப்பட்ட சரண்யா, மெரீனா கடற்கரை நீச்சல் குளம் அருகே விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தாா்.
பின்னா் அவா் மீட்கப்பட்டு, திருவல்லிக்கேணி ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அண்ணா சதுக்கம் போலீஸாா், விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.