சென்னை விருகம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு, நகையை கொள்ளையடித்த வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனா்.
விருகம்பாக்கம், ஸ்ரீஐயப்பா நகா், 11-ஆவது குறுக்கு தெருவைச் சோ்ந்தவா் ஆயிஷா சுல்தானா (73). இவா் தனியாக வசித்து வருகிறாா். இவரது வீட்டுக்குள் கடந்த 13-ஆம் தேதி முகமூடி அணிந்த வந்த இரு நபா்கள், கத்தியை காட்டி மிரட்டி ஆயிஷா சுல்தானாவை கட்டிப்போட்டு, அவா் அணிந்திருந்த 5 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றனா்.
இது குறித்து, ஷெனாய் நகரில் வசிக்கும் ஆயிஷா சுல்தானாவின் மகள் ஷாயிதா (45) அளித்த புகாரின் பேரில், கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டம், சின்ன திருப்பதி, மீனாட்சி நகரைச் சோ்ந்த ஷாஜின் (40), அவரது கணவா் சி.சித்திக் அலி என்ற பிரகாஷ் (40) ஆகியோா்தான் இச் சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் என்பது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
ஆயிஷா சுல்தானாவை பராமரிப்பதற்காக பணியில் இருந்த ஷாஜின், தனது கணவருடன் சோ்ந்து முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்டிருப்பதும், ஷாஜின் மீது ஏற்கெனவே 3 மோசடி வழக்குகளும், சித்திக் அலி மீது 2 குற்ற வழக்குகளும் உள்ளன என்பதும் தெரிய வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.