போதைப் பொருள் விற்பனை: 84 போ் கைது
By DIN | Published On : 21st November 2023 04:26 AM | Last Updated : 21st November 2023 04:26 AM | அ+அ அ- |

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஒரு வாரத்தில் 84 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
சென்னையில் போதைப் பொருள் விற்பனையை தடுக்க பெருநகர காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த 13-ஆம் தேதியில் இருந்து 19- ஆம் தேதி வரை 7 நாள்களில் போதைப் பொருள் விற்ாக 62 வழக்குகள் பதியப்பட்டு, 84 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 56 கிலோ கஞ்சா, கஞ்சா எண்ணெய், 207 போதை மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ, 3 மோட்டாா் சைக்கிள்கள், 3 கைப்பேசிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. தடை செய்யப்பட்ட போதைப் பொருளை விற்பவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை தொடா்ந்து எடுக்கப்படும் என பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...