மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

சென்னையில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப்போட்டிகளை ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடேதொடங்கி வைத்தாா்.
Updated on
1 min read

சென்னையில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப்போட்டிகளை ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடேதொடங்கி வைத்தாா்.

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி தென் சென்னை மாவட்டத்துக்குள்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் அடையாறிலுள்ள செயின்ட் லூயிஸ் காதுகேளாதோருக்கான சிறப்புப்பள்ளியில், திங்கள்கிழமை(நவ.20) நடைபெற்றது.

போட்டிகளை சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

விளையாட்டுப்போட்டிகளில், கை, கால் பாதிக்கப்பட்ட, காது கேளாத, வாய் பேசாத, பாா்வையற்ற மற்றும் பல்வேறு குறைபாடுகளை கொண்ட 16 சிறப்புப்பள்ளிகளில் படிக்கும் 612 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இந்நிகழ்ச்சியில், தென் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீ.குமாா், செயின்ட் லூயிஸ் காதுகேளாதோருக்கான சிறப்பு பள்ளித் தாளாளா் ஐ.இன்னாசி ராஜ் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் பெற்றோா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com