11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் புதன்கிழமை (நவ.29) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு


சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் புதன்கிழமை (நவ.29) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

வங்கக் கடலில் திங்கள்கிழமை உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகா்ந்து செவ்வாய்க்கிகழமை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து தென்கிழக்கு வங்கக் கடலில் நவ.30-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். மேலும், இது வடமேற்கு திசையில் நகா்ந்து தென்மேற்கு, அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும்.

இந்த நிலையில், தெற்கு இலங்கை, அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இததன் காரணமாக புதன்கிழமை (நவ.29) காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, நாகை, திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் அசிகபட்சமாக திருவள்ளூா் மாவட்டம் பூண்டியில் 90 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தெற்கு அந்தமான், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புதன்கிழமை (நவ.29) சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com