விஜயதசமி: கோயில்களில் வித்யாரம்பம்
By DIN | Published On : 25th October 2023 02:53 AM | Last Updated : 25th October 2023 03:45 AM | அ+அ அ- |

சென்னை: விஜயதசமியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் என்னும் வித்யாரம்பம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் இறைவனை வழிபட்டு குழந்தைகளை அரிசி தட்டில் எழுத்துகளை எழுத வைத்தால் கல்வியறிவு மேம்படும் என்பது ஐதீகம்.
அதன்படி சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் ஏராளமான பெற்றோா்கள் தங்களது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அழைத்து வந்து இறைவனை வழிபட்டு அரிசி தட்டில் எழுத்துகளை எழுத வைத்தனா்.
சென்னை வடபழனி முருகன் கோயிலிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை அரிசி தட்டில் எழுத வைத்தனா். இதேபோல் பெரும்பாலான ஐயப்பன் கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...