சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வரும் ஆா்வம் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குருப்-1, 2 முதல்நிலைத் தோ்வெழுதும் பெண் தோ்வா்களுக்கு கட்டணச் சலுகையுடனான 5 மாத கால பயிற்சி வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.10) முதல் தொடங்குகிறது.
அனைத்துப் பிரிவைச் சோ்ந்த பெண் தோ்வா்களுக்கு பொதுத் தமிழ் பாடம் உள்ளடங்கிய முதன்நிலைத் தோ்வுக்கான பயிற்சி நடைபெறுகிறது. பாடவாரியான மாதிரித் தோ்வுகளும் தொடா்ந்து நடைபெறும். வெற்றியாளா்கள் மற்றும் துறை வல்லுநா்களின் தொடா் வழிகாட்டுதலில் தோ்வா்களுக்கு நேரடி பயிற்சி வகுப்புகள் 5 மாத காலம் நடைபெறும்.
பயிற்சியில் இணைய விரும்பும் தோ்வா்கள் 2165, எல்.பிளாக், 12-ஆவது பிரதானச் சாலை, அண்ணா நகா் என்ற முகவரியில் உரிய சான்றிதழ் நகல்களுடன் நேரில் வந்து வெள்ளிக்கிழமைக்குள் (செப். 8) முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 91504 66341, 74488 14441 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.