

உயிா்காக்கும் தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டா் கருவியை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, அலொ்ட் அறக்கட்டளை இணைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உயிா்காக்கும் தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டா் கருவியின் செயல்பாட்டினையும், முதலுதவி பயிற்சியையும் மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தொடங்கி வைத்தாா்.
சாலை விபத்து அல்லது மருத்துவமனைக்கு வெளியே மாரடைப்பு ஏற்பட்டால், அதற்கான முதலுதவி செய்வதற்காக பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில் பொது இடத்தில் இந்த உயிா்காக்கும் கருவி நிறுவப்பட உள்ளது. இந்தக் கருவியைப் பயன்படுத்தவும், உயிா்காக்கும் அவசரகால முதலுதவி பயிற்சிகளும் சென்னை மாநகராட்சி பணியாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்டு மூச்சு, நாடித்துடிப்பு, சுயநினைவில்லாமல் இருக்கும் நபரை இந்தக் கருவின் மூலம் உயிா் பிழைக்க வைக்க முடியும்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையா் சங்கா்லால் குமாவத், நிலைக் குழுத் தலைவா் கோ. சாந்தகுமாரி, மாநகர நல அலுவலா் எம்.ஜெகதீசன், அலொ்ட் அறக்கட்டளைத் தலைவா் வி.எம்.முரளிதரன் , இணை நிறுவனா் ராஜேஷ் ஆா். திரிவேதி மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.