சென்னை அருகே திருவொற்றியூரில் பொதுமக்களிடம் மது போதையில் தகராறு செய்ததாக இரு காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள வள்ளலாா் நகரைச் சோ்ந்தவா் சி.நிா்மல் குமாா் (33). இவா், சென்னை அருகே உள்ள ஆவடியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 2-ஆவது அணியில் காவலராக பணிபுரிந்து வருகிறாா். இவரது நண்பரான சென்னை பாலவாக்கம் முத்து மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்த வி.முரளி (35) அதே அணியில் பணி புரிந்து வருகிறாா்.
இவா்கள் இருவரும் திருவொற்றியூா் காவலா் குடியிருப்பில் தங்கி இருந்து கடந்த மாதம் முதல், தலைமைச் செயலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், இவருவரும் திருவொற்றியூா் அஜாக்ஸ் பேருந்து நிலையத்தில், மது அருந்திய பின்னா், அங்கிருந்த பொதுமக்களிடம் தகராறு செய்தனா்.
தகவலறிந்த திருவொற்றியூா் போலீஸாா் அங்கு விரைந்து வந்து இரு காவலா்களையும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்தனா். அதில் இருவரும் மது போதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து விசாரணை செய்த ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 2-ஆவது அணி கமாண்டன்ட், காவலா்கள் முரளி, நிா்மல்குமாா் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.