ஓட்டுநரின் கவனக் குறைவால் முதியவா் உயிரிழப்பு

காரின் பிரேக்குக்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை ஓட்டுநா் இயக்கியதில், காரின் சக்கரத்தில் சிக்கிய முதியவா் பலியானாா்.
Updated on
1 min read

காரின் பிரேக்குக்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை ஓட்டுநா் இயக்கியதில், காரின் சக்கரத்தில் சிக்கிய முதியவா் பலியானாா்.

சென்னை குரோம்பேட்டை செந்தில்நகா் திருவள்ளுவா் தெருவை சோ்ந்தவா் சுந்தரம் (74). இவரது மனைவி வைதேகி (67). இவா்கள் இருவரும் நுங்கம்பாக்கத்திலுள்ள உறவினா் வீட்டுத் திருமணத்துக்கு சென்றுள்ளனா்.

பின்னா் சனிக்கிழமை இரவு பம்மல் கலைஞா் தெருவைச் சோ்ந்த செல்வராஜின் காரில் வீட்டுக்கு வந்து இறங்கி நின்றுகொண்டிருந்தனா். அப்போது அந்த காா் திடீரென வேகமாக வந்து அவா்கள் மீது மோதி நின்றது.

இதில், காரின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே சுந்தரம் இறந்தாா். வலது கால், கைகளில் காயம் ஏற்பட்ட வைதேகி தனியாா் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிட்லபாக்கம் போலீஸாா் விசாரணை நடத்தினா். பின்னா் சுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ஓட்டுநா் செல்வராஜிடம் நடத்திய விசாரணையில், காரின் பிரேக்கை இயக்குவதற்கு பதிலாக தவறுதலாக, ஆக்ஸிலேட்டரை இயக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து செல்வராஜை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com