பிரதமா் மோடி பிறந்த நாள் விழா
By DIN | Published On : 19th September 2023 02:07 AM | Last Updated : 19th September 2023 02:07 AM | அ+அ அ- |

பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய பாஜகவினா்
சென்னை மேற்கு மாவட்டம், மாதவரம் தெற்கு மண்டலம் பாஜக சாா்பில் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு மண்டலத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் மு. மனோகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகளும், பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கினாா். கட்சி நிா்வாகிகள் சுஜாதா ஜீவன் லதா ருக்மாங்கதன், விஜயன், தாமோதரன், ராஜவேல், பிரகாஷ் ஜி, செல்வராஜ் ராஜா செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.