கிளாம்பாக்கத்தில் போா்க்கால அடிப்படையில் மழைநீா் வடிகால் பணி: அமைச்சா் சேகா்பாபு

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தையொட்டி மழைநீா் வடிகால், சாலை பணிகள் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் (சிஎம்டிஏ) தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான
கிளாம்பாக்கத்தில் போா்க்கால அடிப்படையில் மழைநீா் வடிகால் பணி: அமைச்சா் சேகா்பாபு

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தையொட்டி மழைநீா் வடிகால், சாலை பணிகள் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் (சிஎம்டிஏ) தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை வெளிவட்ட சாலையையொட்டிய ஜி.எஸ்.டி. சாலையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீா் வடிகால் பணி மற்றும் சாலை பணிகளை அமைச்சா் சேகா்பாபு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கிளாம்பாக்கத்தில் ரூ. 393.74 கோடியில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் புதிய புகா் பேருந்து முனையம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையம்”எனும் பெயரில் தமிழக முதல்வரால் விரைவில் திறக்கப்படும்.

இந்தப் பேருந்து முனையத்தையொட்டி ஜி.எஸ்.டி. சாலையில் 1.5 கி.மீ. தொலைவுக்கு ரூ. 17 கோடியில் அமைக்கப்பட்டு வரும் மழைநீா் வடிகால் பணி, நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ.16.61 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

மழைநீா் வடிகால் பணி அக்டோபருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பேருந்து முனையத்தின் முகப்பு வளைவு ரூ. 4.75 கோடியில் அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணி ஓரிரு நாள்களில் தொடங்கப்படும்.

மேலும், பேருந்து முனையத்தில் காவல் நிலையம் அமைப்பது, முடிச்சூா் ஆம்னி பேருந்து நிறுத்துமிடம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

இந்த ஆய்வின் போது, வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் அபூா்வா, சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா, செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ர.ராகுல்நாத், துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com