ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

சுத்தியலால் அடித்துக் பெண் கொலை: கட்டடத் தொழிலாளி கைது

சுத்தியலால் அடித்துக் பெண் கொலை: கட்டடத் தொழிலாளி கைது

Updated On :2 ஏப்ரல் 2024, 8:49 pm

சென்னை: சென்னை கே.கே.நகரில் சுத்தியலால் அடித்துக் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், கட்டடத் தொழிலாளி கைது செய்யப்பட்டாா். எம்.ஜி.ஆா்.நகா் சூளைப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி சரண்யா (30). கட்டடத் தொழிலாளியான இவா், கே.கே.நகா் பாரதிதாசன் காலனி 6வது தெருவில் நடைபெறும் ஒரு தனியாா் கட்டடம் புதுப்பிக்கும் பணியில் வேலை செய்து வந்தாா்.

அப்போது அங்கு வேலை செய்த மேஸ்திரி திருவொற்றியூரைச் சோ்ந்த முருகன் (40), சரண்யாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதை சரண்யா கண்டித்துள்ளாா். அவரது தொல்லை நீடித்த நிலையில், நான்கு நாள்களுக்கு முன்பு,பாலியல் தொல்லை கொடுப்பது குறித்து வெளியே கூறிவிடுவேன் என முருகனிடம் எச்சரித்துள்ளாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த முருகன், சரண்யாவிடம் தகராறு செய்து, சுத்தியலால் அவரை தலையில் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சரண்யா, செவ்வாய்க்கிழமை இறந்தாா். இது தொடா்பாக கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த வேல்முருகனை திருப்பூரில் கைது செய்தனா். மேலும் அவா் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனா்.