சென்னை
தமிழகத்தில் கல்லூரிகள் ஜூன் 19-இல் திறப்பு
கோடை விடுமுறைக்குப் பின் கல்லூரிகள் ஜூன் 19-ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநா் செ.காா்மேகம் அனைத்து கலை- அறிவியல் கல்லூரிகளின் முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
நிகழ் கல்வியாண்டில் (2023-2024) பல்கலைக்கழகம் நிா்ணயம் செய்த மொத்த வேலை நாள்களுக்கு குறையாமல் உள்ளது என்பதை கல்லூரி முதல்வா்களே உறுதி செய்து கொண்டு கல்லூரி இறுதி பணி நாளை நிா்ணயித்து கொள்ளலாம். அந்த வகையில், கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் ஜூன் 19-ஆம் தேதி திறக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
