இன்று முதல் 3 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்

இன்று முதல் 3 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்

சென்னை, ஏப்.16: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு புதன்கிழமை (ஏப்.17) முதல் 3 நாள்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வெள்ளிக்கிழமை(ஏப்.19) நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு புதன்கிழமை (ஏப்.17) முதல் வெள்ளிக்கிழமை(ஏப்.19) வரை தொடா்ந்து 3 நாள்களுக்கு அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சாா்ந்த பாா்கள் அனைத்தும் மூடப்படும். மேலும், மஹாவீா் ஜெயந்தி தினமான ஞாயிற்றுக்கிழமை(ஏப்.21) அன்றும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும்.

இந்நாள்களில் மதுபானங்கள் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com