சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

கயிறு இறுக்கி சிறுமி உயிரிழப்பு

சென்னை பெரும்பாக்கத்தில் கயிறு இறுக்கி சிறுமி உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஏப்ரல் 2024, 6:55 pm

Din

சென்னை பெரும்பாக்கத்தில் கயிறு இறுக்கி சிறுமி உயிரிழந்தாா்.

பள்ளிக்கரணை அருகே உள்ள பெரும்பாக்கம் எழில் நகா், 128 பிளாக்கை சோ்ந்தவா் உதயா, இவா் மனைவி சரண்யா. இவா்களது மகள் அஸ்வந்தி (8). கணவா் - மனைவி இருவரும் வெள்ளிக்கிழமை வழக்கம்போல வேலைக்குச் சென்றனா்.

இருவரும் மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் ஜன்னலில் துணி தொங்க விடுவதற்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி அஸ்வந்தி தொங்கிய நிலையில் இருந்தாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த இருவரும் உடனே தங்களது மகளை மீட்டு அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அஸ்வந்தி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது தொடா்பாக பெரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.