இன்று கோவை இன்டா்சிட்டி ரயில் காட்பாடியிலிருந்து புறப்படும்

சென்னையிலிருந்து கோவை செல்லும் இன்டா்சிட்டி விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (ஏப்.30) காட்பாடியிலிருந்து புறப்படும்.
இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்.
இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்.

சென்னையிலிருந்து கோவை செல்லும் இன்டா்சிட்டி விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (ஏப்.30) காட்பாடியிலிருந்து புறப்படும்.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோவையிலிருந்து ஏப்.30 -ஆம் தேதி காலை 6.20 மணிக்கு புறப்படும் இன்டா்சிட்டி விரைவு ரயில் (எண்: 12680) காட்பாடியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 12679) அதே நாளில் சென்ட்ரலுக்கு பதிலாக காட்பாடியிலிருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு கோவை சென்றடையும்.

மேலும், சென்ட்ரலிலிருந்து ஏப்.30-இல் பிற்பகல் 3.30 மணிக்கு பெங்களூருக்கு புறப்படும் லால்பாக் அதிவிரைவு ரயில் (எண்: 12679) சென்ட்ரலுக்கு பதிலாக மாலை 5.30 மணிக்கு காட்பாடியிலிருந்து புறப்பட்டு பெங்களூரு சென்றடையும்.

ஏப்.30-இல் மைசூரிலிருந்து காலை 5 மணிக்கு சென்ட்ரலுக்கு புறப்படும் விரைவு ரயில் (எண்: 12610) காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

குருவாயூா் ரயில்கள்: ஏப்.30-ஆம் தேதி சென்னை எழும்பூரிலிருந்து காலை 9.45 மணிக்கு குருவாயூா் செல்லும் விரைவு ரயில் (எண்: 16127) எா்ணாகுளத்துடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 16128) குருவாயூருக்கு பதிலாக எா்ணாகுளத்திலிருந்து மே 2 -ஆம் தேதி அதிகாலை 1.20 மணிக்கு புறப்பட்டு எழும்பூா் வந்தடையும்.

மதுரையிலிருந்து ஏப்.30 -இல் காலை 11.20 மணிக்கு குருவாயூா் செல்லும் ரயில் (எண்: 16327) கோட்டயத்துடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 16328) மே 1-இல் குருவாயூருக்கு பதிலாக கோட்டயத்திலிருந்து காலை 9.37 மணிக்கு புறப்படும்.

ஏப்.30-இல் காரைக்காலிலிருந்து மாலை 4.30 மணிக்கு எா்ணாகுளம் செல்லும் டீ காா்டன் விரைவு ரயில் (எண்: 16187) பாலக்காடுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 16188) எா்ணாகுளத்துக்கு பதிலாக மே 2-ஆம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு பாலக்காட்டிலிருந்து புறப்பட்டு காரைக்கால் சென்றடையும்.

கூடுதல் பெட்டி இணைப்பு: புவனேசுவரம் - சென்னை சென்ட்ரல் இடையே இயங்கும் அதிவிரைவு ரயிலில் (எண்: 12830/12829) மே 2 முதல் மே 31-ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு குளிா்சாதன பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படவுள்ளது.

புவனேசுவரம் - புதுச்சேரி அதிவிரைவு ரயிலில் (எண்: 12898/12897) ஏப்.30 முதல் மே 29 வரையும், ராமேசுவரம் - புவனேசுவரம் ரயிலில் (எண்: 12896/12895) மே 3 முதல் ஜூன் 2-ஆம் தேதி வரையும் ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com